ஆதார் அட்டை என்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படும் தனித்துவமான அடையாள எண் ஆகும். இந்த அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இந்த ஆதார் அட்டை அரசு நலத்திட்டங்கள், வங்கிப் பணிகள், செல்போன் சிம்கார்டு உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் தொடர்பான முறைகேடுகள் மற்றும் மோசடிகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில்,மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது..

மேலும் ஆதார் அட்டையில் உள்ள பெயர், பிறந்த தேதி, பாலினம் மற்றும் முகவரி போன்ற மக்கள்தொகை விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று கூறி வருகிறது.. இந்நிலையில் 10 ஆண்டுகள் பழமையான ஆதார் அட்டையை அப்டேட் செய்ய வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI தெரிவித்துள்ளது.. மேலும் ஆதாரை புதுப்பிப்பது ‘வாழ்க்கையைதை எளிதாக்கும்’ என்று UIDAI கூறியுள்ளது. கட்டாயம் இல்லை என்றாலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது..
ஆன்லைனில் ஆதார் விவரங்களை எவ்வாறு புதுப்பிப்பது?
- படி 1: uidai.gov.in க்குச் செல்லவும்
- படி 2: ‘My Aadhaar’ என்பதன் கீழ், ‘Update Demographics Data and Check status’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- படி 3: மற்றொரு இணையதள பக்கம் திறக்கும்.. https://myaadhaar.uidai.gov.in/. நீங்கள் ‘Login’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- படி 4: உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். ‘Send OTP’ என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும்.
- படி 5: உள்நுழைந்த பிறகு, ”Update Aadhaar Online’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- படி 6: வழிமுறைகளைப் படித்த பிறகு, ”Proceed to update Aadhaar’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- படி 7: நீங்கள் புதுப்பிக்க விரும்பும் தரவு புலத்தைத் தேர்ந்தெடுக்கவும். ஆதார் அட்டையில் புதுப்பிக்க புதிய முகவரிக்கான ஆதாரத்தை நீங்கள் பதிவேற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். ‘Proceed to update Aadhaar’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- படி 8: விவரங்களை சரிபார்த்து Submit என்பதை கிளிக் செய்யவும்.
- படி 9: பேமெண்ட் போர்ட்டலுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பிறகு, முகவரியைப் புதுப்பிக்க ரூ.50 செலுத்தவும்.