வெளிநாட்டு பயணிகள் கொரோனா தொற்றால் பாதிக்கவில்லை என உறுதிமொழி படிவத்தை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, ஜப்பான், வடகொரியா, தாய்லாந்து, தென் கொரியா, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் தாமாகவே கொரோனா பாதிப்பில்லை என்ற சான்றிதழை ஏர் சுவிதா வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனுடன் கொரோனா தொற்றால் பாதிக்கவில்லை என உறுதிமொழி படிவத்தை பயணிகள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நாடுகளின் பயணிகளுக்கு அனுமதி சீட்டு வழங்கும் நடைமுறையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளுக்கு அனுமதி சீட்டு வழங்கும் போது உரிய சான்றிதழைப் பயணிகள் பதிவேற்றியுள்ளார்களா? என்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அனைத்து வர்த்தக விமான நிறுவனங்கள் விமான நிலைய நிர்வாகிகள், மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் பல்வேறு இடங்களில் கட்டுப்பாடுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.