சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில், தினசரி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆன்லைன் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட் புக்கிங் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், சபரிமலையில் வரும் 27ஆம் தேதி நடைபெறும் மண்டல பூஜை நாளில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். வரும் 26ஆம் தேதி பிற்பகலுக்குப் பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அன்றைய தினம் 70 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.