fbpx

பிஎம் கிசான் திட்ட பயனாளிகள் கவனத்திற்கு..!! உங்களுக்கு ரூ.2,000 வராது..!! வெளியான அதிர்ச்சி அறிவிப்பு..!!

பிஎம் கிசான் பயனாளிகள் 16-வது தவணைத் தொகையினை பெறுவதற்கு e-KYC எனும் ஆதார் எண் உறுதி செய்ய வேண்டும் என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் “பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி” திட்டமானது பிப்ரவரி 2019ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2.61 லட்சம் கோடிக்கு மேல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 3 கோடிக்கும் அதிகமான பெண் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். அவர்கள் மொத்தமாக ரூ. 53,600 கோடி நிதியாகப் பெற்றுள்ளனர். நடப்பாண்டில் 16-வது தவணையைப் பெற பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதாரை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே தவணை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான, கடைசி தேதி 31.01.2024 ஆகும். எனவே , தகுதியுள்ள வேளாண் மக்கள் உடனடியாக ஆதாரை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Chella

Next Post

பெரும் சோகம்..!! அதிமுக மாஜி அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் உயிரிழப்பு..!! நடந்தது என்ன..?

Thu Jan 25 , 2024
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் இளைய மகன் சசிமோகன். இவரது மனைவி பூர்ணிமா, கடந்த 18ஆம் தேதி மாலையில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் உள்ள தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தார். பூஜை அறையில் இருந்த விளக்கு தீ பிடித்ததில் அவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதில், சுமார் 80% தீ காயத்துடன் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், […]

You May Like