fbpx

மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு.. அரசு கொண்டு வர உள்ள மிகப்பெரிய மாற்றம்..

அரசு பணியாளர்களின் குறைந்தபட்ச சேவை மற்றும் நிபந்தனைகளில் மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

7வது ஊதியக் குழுவின்படி, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. இது முந்தைய ஆறு மாதங்களுக்கான AICPI குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது. இம்முறை, ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் இரண்டு மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும்.

ஜனவரி முதல் ஜூன் வரையிலான தரவுகளின் அடிப்படையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.. ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த செப்டம்பர் 28 அன்று மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. தற்போதைய நிலவரப்படி அகவிலைப்படி 4% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி தற்போது உள்ள 34 சதவீதத்திற்கு பதிலாக 38 சதவீத டிஏ உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதமே இந்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.. குறிப்பாக நவராத்திரியின் போது இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்புக்கு முன்பு, குறைந்தபட்ச சேவை மற்றும் நிபந்தனைகளில் மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.. மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச சேவை விதிகளை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.. 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், பதவி உயர்வுக்கு தேவையான மாற்றங்களில் உரிய திருத்தங்கள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் அவை ஆட்சேர்ப்பு விதிகள் மற்றும் சேவை விதிகளில் இணைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது..

அதன்படி லெவல் 1 மற்றும் லெவல் மற்றும் 2 பணிகளுக்கு 3 ஆண்டுகள் பணிபுரிவது அவசியம்.. இதே போல் லெவல் 6 முதல் லெவல் 11 வரை 12 ஆண்டுகள் சேவை அவசியம்.. மேலும் லெவல் 7 லெவல் 8 ஆகிய பணிகளுக்கு 2 ஆண்டுகள் சேவை அவசியம்.. இதற்காக அனைத்து அமைச்சகங்களும் / துறைகளும் உரிய நடைமுறையை பின்பற்றி ஆட்சேர்ப்பு விதிகளில் தேவையான மாற்றம் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது..

Maha

Next Post

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டதா..? வைரலாகும் செய்தி.. உண்மை என்ன..?

Fri Sep 23 , 2022
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாக பரவி வரும் தகவல் போலியானது என்று அரசு விளக்கமளித்துள்ளது. ஜூலை 1, 2022 முதல் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாக கூறப்படும் செய்தி சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. செப்டம்பர் 20, 2022 தேதியிட்ட நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையால் வெளியிடப்பட்ட கடிதத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் […]

You May Like