fbpx

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! இந்த 5 வங்கிகளுக்கும் அதிரடி கட்டுப்பாடு..!! ரிசர்வ் வங்கி உத்தரவு..!!

நாட்டில் உள்ள பொதுத்துறை, தனியார் வங்கிகளைப் போலவே கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கி வருகிறது. இந்த வங்கிகளின் நிதி நிர்வாகத்தில் விதிமீறல்கள் ஏற்படும் போது ரிசர்வ் வங்கி தலையிட்டு கட்டுப்பாடுகளை விதிக்கும். அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி தற்போது 5 கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, HCBL கூட்டுறவு வங்கி, உரவகொன்டா கூட்டுறவு நகர வங்கி, ஆதர்ஷ் மஹிளா நகரி சஹகாரி வங்கி மர்யாதித், சிம்ஷா ஷங்கரா வங்கி நியமிதா, ஷங்கர்ராவ் மோஹிதே பாடீல் ஷஹகாரி வங்கி ஆகிய 5 வங்கிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி இல்லாமல் இனி இந்த வங்கிகள் புதிதாக டெபாசிட் அல்லது கடன் வழங்க முடியாது. மேலும், மேற்குறிப்பிட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க மோசமான நிதி நிலைமையே காரண. மேலும், தங்கள் வைப்பு தொகையின் மீது அச்சத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் ஆவணங்களை சமர்பித்து ரூ.5 லட்சம் வரை காப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த வழிகாட்டுதல்களை கொண்டு வங்கியின் உரிமங்கள் ரத்தாகி விட்டதாக வாடிக்கையாளர்கள் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Chella

Next Post

பெரம்பலூர் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடி கைது……!

Sat Feb 25 , 2023
நாட்டில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் பள்ளி குழந்தைகளுக்கு நேரிடும் இது போன்ற அவல நிலையை நினைத்தால் நெஞ்சம் பதை பதைக்கிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு […]

You May Like