fbpx

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! இந்த தேதியில் யாரும் வங்கிக்கு செல்ல வேண்டாம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

வங்கிகள் மற்றும் ஊழியர்களுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கோரி, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வரும் 19ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஊழியர்களின் ஊதியம், வேலை ஒப்பந்தம், சேவையை மேம்படுத்துதல், வங்கிகளில் கணினி மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இரு தரப்பு ஒப்பந்தங்கள் வாயிலாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் நிறைவேற்றி உள்ளது. ஆனால் சில வங்கிகள், இருதரப்பு ஒப்பந்தங்களை மதிக்காமல், தன்னிச்சையாக முடிவு எடுக்கின்றன. சில வங்கிகள், ஊழியர்களை ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு இடமாற்றம் செய்கின்றன. ஒரு வங்கியில் மட்டும் 3,000 ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொழிலாளர் சட்டத்தை மீறும் செயல்.

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! இந்த தேதியில் யாரும் வங்கிக்கு செல்ல வேண்டாம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சில வங்கிகள் பணத்தை பெற்று, ஊழியர், துப்புரவு ஊழியர் ஆகிய பணிகளுக்கு நிரந்தர ஊழியர்களை நியமிக்காமல், அயல்பணி வாயிலாக தனியாருக்கு வழங்க முடிவு செய்துள்ளன. ஒரு முன்னணி வங்கி, பொதுமக்களிடம் வைப்புத் தொகை வசூலிக்கும் பணியில் ஈடுபட்ட 240 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அவர்களுக்கான எவ்வித இழப்பீட்டையும் வழங்கவில்லை. எனவே, இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரி வேலைநிறுத்தம் செய்வதற்காக வங்கி ஊழியர் சங்கம் நோட்டீஸ் அளித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! இந்த தேதியில் யாரும் வங்கிக்கு செல்ல வேண்டாம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தலைமை தொழிலாளர் நலத்துறை கமிஷனருடன் நாளை மறுதினம் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதில் தீர்வு காணாவிட்டால், வரும் 19ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது”. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

நடிகர் கார்த்தியின் ஃபேஸ்புக் ஹேக்கானது…

Mon Nov 14 , 2022
நடிகர் கார்த்தியின் ஃபேஸ்புக் பக்கம் ஹேகட செய்யப்பட்டது குறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். திரைப்பிரபலங்கள்  பொதுவாக தாங்கள் சார்ந்த படங்களின் அப்டேட்,  தங்களது புதிய படங்களின் அறிவிப்பு  மற்றும் தங்களின் பர்சனல்  கொண்டாட்டங்கள் தொடர்பான தகவல்கள், புகைப்படங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக  ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.  ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும்  இடையே  ஒரு தொடர்பு ஏற்படுத்தும் ஒரு இணைப்புப் பாலம் போல செயல்படுபவை  பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம்  போன்ற சமூக வலைதளங்கள்.. […]

You May Like