பொறியியல் படிப்புக்களில் சேர விண்ணப்பித்த சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் மேற்படிப்புகளில் நீட் மருத்துவப்படிப்பு, பொறியியல் கல்லூரி மற்றும் பல்வேறு தரப்பட்ட துறை சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கான அடுத்தகட்ட முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்களில் 2,28,122 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியானது, இதையடுத்து கடந்த ஜூன் முதல் வாரத்தில் இதற்கான ரேண்டம் எண் வெளியானது. பொறியியல் படிப்புக்களில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 26-ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில், சிறப்புப் பிரிவினருக்கு இன்றும், பொதுப் பிரிவினருக்கு ஜூலை 7ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.