பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, அரசாங்கம் ரூ.2,000 பணத்தை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துகிறது.. ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும், அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 பணம் தகுதியான விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

அந்த வகையில் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 27-ம் தேதி 13-வது தவணையான ரூ.2000 விவசாயிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.. ஆனால் இந்த முறை, ரூ.2,000 பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் 8.54 கோடியாகக் குறைந்துள்ளது.. கடந்த அக்டோபரில், 8.99 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்ற நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.. அதாவது 25% பயனாளிக்கு இந்த பணம் கிடைக்கவில்லை..
எனவே PM-KISAN இன் 13வது தவணையைப் பெறாத விவசாயிகள், pmkisan-ict@gov.in என்ற இணையதளத்தில் புகாரளிக்கலாம். தகுதியுடைய, ஆனால் தவணைப் பிரச்சனை உள்ள விவசாயிகள் 011-2430-0606 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், அவர்கள் பின்வரும் எண்களை தொடர்பு கொள்ளலாம்:
- PM கிசான் கட்டணமில்லா எண்: 18001155266
- PM கிசான் ஹெல்ப்லைன் எண்: 155261
- PM கிசான் லேண்ட்லைன் எண்கள்: 011-23381092, 23382401
- PM கிசானின் புதிய ஹெல்ப்லைன்: 011-24300606
- PM கிசானின் மற்ற ஹெல்ப்லைன்: 0120-6025109
- மின்னஞ்சல் ஐடி: pmkisan-ict@gov.in