தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தமிழ்நாடு முழுக்க பள்ளி கல்வித்துறை சார்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தனியார் பள்ளிகளில் மட்டுமே முன்பெல்லாம் கலைநிகழ்ச்சிகள் நடந்து வந்தன. ஆனால், அதை முறியடிக்கும் விதமாக அரசுப் பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடந்தன. இதன் மூலம் மாணவர், மாணவியர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட முடிந்தது. இந்த கலைநிகழ்ச்சிகள் பெரிய அளவில் கவனம் பெற்றது. இதில் சிலர் தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுக்கும் அளவிற்கு கவனம் பெற்றனர். இந்த நிலையில்தான் பள்ளிகல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, தனியார் பள்ளிகளில் படிக்க விரும்பும் மாணவியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் பயில மார்ச் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி 25% இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்துகிறது. தனியார் பள்ளிகளில் படிக்கும் விரும்பும் மாணவர்களின் கனவை நிறைவேற்றும் விதமாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்து இருக்கும் மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2023-24ம் ஆண்டுக்கான 25% இடங்களுக்கு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி வரை ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஏழை மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் . தனியார் பள்ளிகளில் படிக்க ஆசை உள்ள, ஆனால் வசதி இல்லாத மாணவ, மாணவியர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.