fbpx

பெண்களே கவனிங்க.. தங்கம் விலை இன்று குறைவு.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,400க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் 2 வங்கிகள் திவாலானதை அடுத்து பாதுகாப்பு கருதி, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,550க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,400க்கு விற்பனையாகிறது.. எனினும் வெள்ளியின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசு உயர்ந்து ரூ.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000க்கு விற்பனையாகிறது.

Maha

Next Post

ஒரு கல்லூரி பேராசிரியர் செய்யும் காரியமா இது…..? மாணவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர் பணியிடை நீக்கம்……!

Sat Mar 25 , 2023
கோவையில் பிரபல தனியார் கலை அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் டீன் மற்றும் உயிர் வேதியியல் துறை தலைவராக இருந்து வருபவர் மதனசங்கர். இவரிடம் முனைவர் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் மதன் சங்கர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபடுவதாக பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நிர்வாகம் உள்ளிட்டவற்றில் புகார் வழங்கினார். இந்த புகார் தொடர்பாக விசாரணை செய்ய ஐசிசி கமிட்டி அமைக்கப்பட்டு […]

You May Like