fbpx

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. ஓட்டுநர் உரிமம் தேர்வுகளுக்கு புதிய விதி…

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு தொடர்பான புதிய விதிமுறையை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது..

போக்குவரத்து ஆணையர் இதுகுறித்து அனைத்து சரக அலுவலர்கள், அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் அனைத்து மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.. அதில் “ போக்குவரத்து ஆணையர் தலைமையில் கடந்த மாதம் 18-ம் தேதி காணொலி வாயிலாக நடந்த ஆய்வு கூட்டத்தி வழங்கிய அறிவுரையின் படி அனைத்து ஓட்டுநர் உரிம தேர்வுகளும் கணினியில் முன்பதிவு செய்த பின்னரே நடத்தப்பட வேண்டும்..

வாரத்தில் திங்கள், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.. இந்த தேர்வுகளுக்கு கணினி மூலம் முன்பதிவு செய்திட ஏதுவாக, பொதுமக்களின் வசதிக்கேற்ப நாள் மற்றும் நேரத்தினை தேர்ந்தெடுத்து வழிவகை செய்யப்பட வேண்டும்..

மேலும் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய 2 நாட்களில், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூலம் விண்ணப்பங்களுக்கான தேர்வு நடத்தப்பட வேண்டும்.. இந்த உத்தரவுப்படி அனைத்து சரக அலுவலர்கள், அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் அனைத்து மோட்டார் வாகன ஆய்வாளர்களும் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

திருப்பதி தேவஸ்தனத்தில் வேலை என ரூ.1.20 கோடி மோசடி … தேவஸ்தன ஊழியரை கைது செய்தது போலீஸ் ….

Sat Sep 10 , 2022
திருப்பதி தேவஸ்தனத்தில் வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களிடம் ரூ.1.20 கோடி பணம் மோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி தேவஸ்தனத்தில் வேலை பார்த்து வருபவர் பாலகிருஷ்ணா . இவர் தான் பணியாற்றும் இடத்தில் உயரதிகாரிகளிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பறித்துள்ளார். வேலை வரும் என்று பல நாள் காத்திருந்தும் வேலை கிடைக்கவில்லை. பாலகிருஷ்ணனிடம் பணம் கொடுத்த இளைஞர்கள் சென்று பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது எப்பொழும் […]

You May Like