fbpx

வாகன ஓட்டிகளே கவனம்..!! இனி 40 தான் ஸ்பீடு லிமிட்..!! மீறினால் என்ன நடக்கும் தெரியுமா..? காவல்துறை எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் வாகன நெரிசல் என்பது மிகப் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. முன்பு சென்னையில் மட்டுமே இருந்த இந்தப் பிரச்சனை இப்போது இரண்டாம் கட்ட நகரங்களுக்கும் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இன்னுமே பல நகரங்களில் டிராபிக் என்பது முக்கிய பிரச்சனையாகவே இருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சென்னைக்கு அடுத்து மிக முக்கிய நகராக கோவை இருக்கிறது. ஐடி, தொழிற்துறை என்று கோவையில் பல்வேறு விதமான துறைகள் சிறப்பாக இருக்கிறது. மேலும், சர்வதேச விமான நிலையமும் இருக்கும் நிலையில், கோவையை நோக்கிப் பல நிறுவனங்கள் வந்து குவிகின்றன. வேலைவாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அண்டை மாவட்டங்களில் இருந்து பலரும் கோவைக்கு வருகின்றனர்.

குறிப்பாக, பீக் ஹவரில் வெளியே சென்றால் நிச்சயம் நாம் டிராபிக்கில் சிக்கிவிடும். சென்னையைக் காட்டிலும் கோவையில் டிராபிக் மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கோவையில் டிராபிக் பிரச்சனையைச் சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ திட்டமும் அங்கே கொண்டு வரப்பட உள்ளது. இதற்கிடையே கோவையில் சாலைகளில் வாகனங்களை வேகமாக இயக்குவதைத் தடுக்க புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, கோவையில் அதிகபட்ச வேகமாக 40 கிமீ என அறிவிக்கப்பட்டுள்ளது. 40 கிமீ வேகத்தைத் தாண்டினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளது.

இதற்காகக் கோவை அவினாசி சாலை, சத்தி சாலை, பாலக்காடு சாலை ஆகிய மூன்று சாலைகளில் ஸ்பீடு ரேடார் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்த முக்கிய சாலைகளில் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வாகனங்கள் சென்றால் அவை தானியங்கி முறையில் கண்டறியப்பட்டு வாகன உரிமையாளருக்கு இ-சலான் அனுப்பி வைக்கப்படும். கடந்த சில நாட்களாக இது அமலில் இருக்கிறது. இந்த 3டி ஸ்பீடு ரேடார் மூலம் ஒரே நேரத்தில் 32 வாகனங்களின் வேகத்தை கண்டறிய முடியுமாம். இரவு நேரங்களில் வாகனங்களின் ஹை-பீம்களை தாண்டி வண்டியின் எண்ணைக் கண்டறியும் நவீனத் தொழில்நுட்பமும் இதில் இருக்கிறது. 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு வாகனம் சென்றால், அதன் உரிமையாளர்களுக்கு உடனடியாக இ-சலான் அனுப்பி வைக்கப்படுகிறது.

இருப்பினும், இதற்குக் கோவை மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளப்பியுள்ளது. அவசர நேரத்தில் குறிப்பாகக் காலை மற்றும் மாலை நேரங்களில் 40 கிமீ வேகத்தைத் தாண்டாமல் வாகனத்தை இயக்க முடிவதில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, அதிகபட்ச வேகம் என்னவாக இருக்கலாம் என்பதை நிர்ணயம் செய்ய எந்தவொரு ஆய்வறிக்கையும் இல்லாத நிலையில், போலீசார் எப்படி 40 கிமீட்டருக்கு மேல் செல்லக் கூடாது என்று கூறுகிறார்கள் என்றும் கோவை வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக தலைநகர் சென்னையிலும் இருசக்கர வாகனம், கார்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு இதுபோல அதிகபட்ச வேகம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இருப்பினும், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

கொடுமை..!! சக மாணவியின் வாட்டர் பாட்டிலில் சிறுநீர் நிரப்பி வைத்த மாணவர்கள்..!! கட்டை கம்புடன் கிளம்பிய கிராம மக்கள்..!!

Tue Aug 1 , 2023
சக மாணவியின் வாட்டர் பாட்டிலில் மாணவர்கள் சிலர் சிறுநீரை நிரப்பி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பில்வரா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள், வேற்று சமூகத்தை சேர்ந்த சக மாணவியின் வாட்டர் பாட்டிலில் சிறுநீரை நிரப்பி வைத்துள்ளனர். அதுமட்டும் இன்றி அந்த மாணவியின் பேக்கில் காதல் கடிதத்தையும் மாணவர்கள் சிலர் வைத்துள்ளனர். இந்த விவகாரம் மாணவியின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனால், கொதித்தெழுந்த கிராம மக்கள், […]

You May Like