தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை பெற மே 18ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை குழந்தைகள், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், ஏழை குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-2024-ம் கல்வியாண்டிற்கான தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை ஏப்ரல் 20ம் தேதி தொடங்கியது. தங்களது பிள்ளைகளுக்கு இலவச சேர்க்கை பெற விரும்பும் பெற்றோர்கள் வரும் மே 18-ந்தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், விண்ணப்பிக்கும் குழந்தைகள் 2019 ஆகஸ்டு 1-ந் தேதியில் இருந்து 2020-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். 1-ம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 2017 ஆகஸ்டு 1-ஆம் தேதியில் இருந்து 2018-ம் ஆண்டு ஜூலை 31- தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.