fbpx

பெற்றோர்களே கவனம்.. கொரோனாவால் பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு..

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.. அதிக காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர், டாக்டர் விபின் வசிஷ்தா இதுகுறித்து பேசிய போது “ 6-11 மாத வயதுடைய குழந்தைகளிடையே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது, பெரும்பாலான குழந்தைகளுக்கு மூச்சுக்குழாய் அழற்சியின் அம்சங்களுடன் மிதமான காய்ச்சல், சளி மற்றும் லேசான இருமல் உள்ளது. ஒரு வித்தியாசமான அம்சம் கண் அரிப்பு மற்றும் வெண்படல அழற்சி.. இது முந்தைய அலைகளில் காணப்படவில்லை..” என்று தெரிவித்தார்..

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குழந்தைகளில் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் அரிதானவை மற்றும் லேசானவை. இருப்பினும், வைரஸால் பாதிக்கப்பட்ட சிலரின் உடல் பாகங்கள் வீக்கம் அடைந்தது.. இதில் நுரையீரல், மூளை, இதயம், சிறுநீரகம், தோல், கண்கள் அல்லது இரைப்பை குடல் உறுப்புகள் அடங்கும்..” என்று தெரிவித்தார்..

குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் நினைவு ஆராய்ச்சி நிறுவனத்தின் குழந்தை மருத்துவ துறையின் இயக்குநரும் தலைவருமான டாக்டர் கிரிஷன் சுக் இதுகுறித்து பேசிய போது “குழந்தைகளிடையே கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சாதாரண சுவாச நோய்த்தொற்றுகளுடன் கொண்டு வரப்படும் குழந்தைகளுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.. பள்ளி செல்லும் குழந்தைகள் ” கடந்த இரண்டு வாரங்களில் காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் தீவிர பாதிப்பு காரணமாக குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

தண்ணீர் குடிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. நிபுணர்கள் சொன்ன தகவல்..

Tue Apr 11 , 2023
நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான அடிப்படை தேவைகளில் ஒன்று தண்ணீர்.. தண்ணீர் இல்லாமல் வாழும் வாழ்க்கையை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு போதுமான தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் அவசியம். போதுமான தண்ணீர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.. எனவே, நீரேற்றத்தை பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியம்.. ஏனெனில் நீரிழப்பு, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உடலின் […]
கொளுத்தும் கோடை வெயில்..! மது குடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!

You May Like