fbpx

பயணிகள் கவனத்திற்கு..!! நாளை ரயில் சேவைகள் ரத்து..!! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கோரமண்டல் ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 21 ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுவிட்டன. இரவு பகலாக நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை துரித கதியில் நடத்த ரயில்வே துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இன்னும் சரக்கு ரயிலில் 2 பெட்டிகளும், என்ஜினும் மட்டுமே அகற்றப்பட இருக்கிறது. காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலர் சிகிச்சை முடிந்து திரும்பிவிட்டனர்.

இந்நிலையில், நாளை ஹவுராவிலிருந்து பெங்களூரு செல்லும் விஸ்வேஸ்ரயா விரைவு ரயில் (12863) ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாளை ஹவுராவிலிருந்து சென்னை வரும் சென்னை சென்ட்ரல் மெயில் ரயில் (12839) ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், நாளை திப்ரூகார்க் – கன்னியாகுமரி செல்லும் விவேக் விரைவு ரயில் (22504) சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Chella

Next Post

100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் கவனத்திற்கு..!! இதை செய்தால் மட்டுமே இனி சம்பளம் கிடைக்கும்..!!

Sun Jun 4 , 2023
இந்தியாவில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மக்கள் பலருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊழியர்களுக்கு சம்பளம் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் இணைப்பு மூலமாக மோசடிகள் தடுக்கப்படும் என்றும் ஆதார் மூலமாக சம்பள பரிமாற்றம் குறித்து மத்திய ஊரக அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி 100% நேரடி பயன் பரிமாற்றக் […]

You May Like