சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு..! காவல் ஆய்வாளருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் கொரோனா ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தந்தை, மகனை காவல் நிலையத்தில் அடித்து சித்ரவதை செய்து கொலை செய்ததாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உட்பட 9 பேரை சிபிஐ கைது செய்து மதுரை சிறையில் அடைத்தது.

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு : ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது  உச்ச நீதிமன்றம் | Supreme Court dismisses bail petitions in Sathankulam  father-son murder case – News18 Tamil

இவர்களில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், இந்த வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் 105 சாட்சிகளில் 30 பேர் மட்டுமே இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளனர். 20 மாதங்களாக சிறையில் உள்ளேன். விசாரணை முடியும் வரை சிறையில் அடைத்து வைப்பது சட்டவிரோதம். எனவே ஜாமீன் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார். அப்போது, சிபிஐ தரப்பில் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Chella

Next Post

பன்னிரண்டாம் வகுப்பு மாணவனுடன், கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆசிரியை க்கு நேர்ந்த பரிதாபம்..!

Mon Jul 4 , 2022
உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை(35), தன் கணவர் மற்றும் தாயாருடன் வசித்து வந்தார். அவருடைய கணவரும் ஓர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையில் அந்த ஆசிரியைக்கு அயோத்தி மாவட்டத்திலுள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு, டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வந்த மாணவனுடன் அந்த ஆசிரியைக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது அந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனிடையே, அந்த ஆசிரியை 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். […]
ஆசிரியையை 101 முறை கத்தியால் குத்திக்கொன்ற முன்னாள் மாணவன்..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

You May Like