fbpx

பயணிகள் கவனத்திற்கு!… டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிக்கலாம்!… எப்படி தெரியுமா?… விவரம் இதோ!

ரயில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்கவில்லை என்றால், ரயிலில் ஏறிய பிறகு, டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம் என்ற புதிய வசதியை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் போக்குவரத்தில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு வசதிகள் அதிகம் என்பதால் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் செல்கின்றனர். இதனால், இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி வருவதோடு சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. அந்த வகையில், ஒரு பயணி தனது டிக்கெட் உறுதி செய்யப்படாமலோ செல்லும் இடத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலோ ரயில்வே கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை கார்டு பேமெண்ட் மூலமும் செலுத்தலாம். இதற்காக ரயில்வே 4ஜி இணைப்பும் வழங்கப்படுகிறது.

டெபிட் கார்டு மூலம் ரயிலில் கட்டணம் அல்லது அபராதம் செலுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, இப்போது உங்களிடம் ரயில் டிக்கெட் இல்லை என்றால், ரயிலில் ஏறிய பிறகு, டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் எடுக்கலாம்.ரயில்வே விதிகளின்படி, முன்பதிவு செய்யாமல், ரயிலில் எங்காவது செல்ல வேண்டும் என்றால், நடைமேடை டிக்கெட் எடுத்து ரயிலில் ஏற முடியும்.ரயிலில் டிக்கெட் பரிசோதகரை அணுகி மிக எளிதாக டிக்கெட்டுகளைப் பெறலாம்.

பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்து உடனடியாக டிக்கெட் பரிசோதகரைத் தொடர்புகொள்ள வேண்டும். அவர் உரிய தொகையைப் பெற்றுக்கொண்டு டிக்கெட்டை வழங்குவார்.இதுவரை டிக்கெட் பரிசோதகர் வைத்திருக்கும் பாயிண்ட் ஆப் சேல் சாதனத்தில் 2ஜி சிம் கார்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் நெட்வொர்க் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இப்போது ரயில்வே 4G சிம் பயன்படுத்த தொடங்கியுள்ளது என்பதால் டிக்கெட்டுக்கான தொகையை எளிதாகச் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

ஐபிஎல்!... முழங்கால் காயத்துடன் விளையாடிவருகிறார் தோனி!... சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர்!

Fri Apr 14 , 2023
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி முழங்கால் காயத்தால் அவதிப்பட்டுவருவதாக அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் ஐபிஎல் 16வது சீசனின் 17வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜோஸ் பட்லரின் அதிரடி அரைசதம்(52) மற்றும் தேவ்தத் படிக்கல்(38), […]

You May Like