fbpx

Kalki 2898 AD: மிரட்டலான லுக்கில் தீபிகா படுகோனே..! வெளியான போஸ்டரால் எகிறும் எதிர்பார்ப்பு..!

கல்கி 2898 AD படம் குறித்த பரபரப்பும், ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் ட்ரைலர் நாளை (ஜூன் 10) வெளியவதாக படக்குழு அறிவித்ததில் இருந்தே ரசிகர்களின் ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது. பாகுபலி படத்தின் மூலம் இந்திய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நாயகனாக மாறிய நடிகர் பிரபாஸ். இவரின் நடிப்பில் அடுத்தடுத்து வந்த படங்கள் தோல்வியையே அடைந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியான சலார் படம் ரசிகர்களை கவர்ந்து சற்று ஆறுதல் அளித்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிக்கொண்டுள்ளது.

இதற்கிடையில் நடிகர் பிரபாஸ், இயக்குனர் நாக் அஸ்வினுடன் இணைந்து கல்கி 2898 AD என்ற படத்தை உருவாகியுள்ளன. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த கல்கி 2898 AD படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் பிரபாஸூடன் இணைந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார்அமிதாப்பச்சன், அதிரடிக்கு பெயர்போன நடிகை தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் வில்லனாக உலக நாயகன் கமல் ஹாசன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகின்றார்.

இந்த படத்தில் நடித்திருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் கதாபாத்திரத்தை சில தினங்களுக்கு முன் படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. அதேபோல் நாளை இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகும் நிலையில், தீபிகா படுகோனின் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனே தனது புதிய போஸ்டரை சமூக ஊடகங்களில் தற்போது பகிர்ந்துள்ளார். போர் வீராங்கனை போல் காட்சியளிக்கும் தீபிகா படுகோனே எதோ ஒன்றை ஆச்சரியத்துடன் பார்ப்பது போல் வெளிவந்த இந்த போஸ்டரை வைத்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Read More: தலைநகரம் திரைப்பட நடிகையா இது..? இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா..? ஆளே அடையாளம் தெரியல..!!

English Summary

Kalki 2898 AD: Deepika Padukone’s new look makes fans curious and excited

Kathir

Next Post

பரபரப்பு...! தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வி.கே.பாண்டியன் அறிவிப்பு...!

Sun Jun 9 , 2024
VK Pandian has announced his retirement from active politics.

You May Like