மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வரும் ஏப்ரல் 4ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏப்ரல் 4ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி, அன்று பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. எனவே, இந்த தேதியில் நோயாளிகள் ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என்பதால் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்றும் மேலும், ஏப்ரல் 5ஆம் தேதி முதல் வெளிப்புற நோயாளிகள் பிரிவுகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.