fbpx

ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு.. வரும் 31-ம் தேதிக்குள் இதை செய்யவில்லை எனில் சிக்கல்…

தேசிய ஓய்வூதிய திட்டத்தின் அனைத்து சந்தாதாரர்களும் வரும் 31-ம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது உள்ளிட்ட சில சேவைகளைப் பெறுவதற்கு, பான் கார்டுடன் ஆதார் அட்டையை இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2022 என்று அறிவிக்கப்பட்டது.. இருப்பினும், பான் கார்டு – ஆதார் அட்டை இணைப்புக்கான கால அவகாசம் மார்ச் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கத் தவறியவர்கள், வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் அதை இணைக்கலாம், ஆனால் அதற்கு அபராதக் கட்டணம் ரூ. 1,000. செலுத்த வேண்டும்..

ஆதார்-பான் இணைப்பு நாளையே கடைசி.! தவறினால் எவ்வளவு அபராதம் தெரியுமா?

பான்-ஆதார் இணைப்பிற்கான காலக்கெடு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளது.. அதாவது, மார்ச் 31-ம் தேதிக்குள் இந்த இரண்டு முக்கிய ஆவணங்களும் இணைக்கப்படாவிட்டால், உங்கள் பான் எண் ஏப்ரல் 1 முதல் செயலிழந்துவிடும்.. குறிப்பாக தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (NPS – National Pension System) அனைத்து சந்தாதாரர்களுக்கும் இது மிகவும் முக்கியமானது. அதாவது தேசிய ஓய்வூதிய திட்டத்தின் சந்தாதாரர்கள் வரும் 31-ம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும்.. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, சந்தாதாரர்கள் தங்கள் ஆதார் தங்கள் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும், இல்லையெனில் அவர்களின் பரிவர்த்தனைகளில் சில கட்டுப்பாடுகள் இருக்கும் என்றுகூறப்படுகிறது..

ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பான் என்பது முக்கிய அடையாள எண்களில் ஒன்று என்றும், NPS கணக்குகளுக்கான உங்கள் வாடிக்கையாளரை (KYC) அறிந்து கொள்வதற்கான ஒரு அங்கமாகும் என்றும் தெரிவித்துள்ளது. ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம், தேசிய ஓய்வூதிய திட்டத்தை(NPS) நிர்வகிப்பதுடன் ஒழுங்குபடுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் சந்தாதாரர்கள் தங்கள் சொந்த முதலீட்டு விருப்பங்களையும் ஓய்வூதிய நிதியையும் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதிய கணக்கைத் திறக்க, விண்ணப்பதாரர் நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் ஏதேனும் ஒன்றில் ஒரு கணக்கைத் தொடங்க வேண்டும். அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், தனி நபர்கள், ஏழை மக்கள் என அனைவருமே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.. இந்த திட்டத்தின் பயனாளர்களுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) பெறுவார்கள். இத்திட்டம் வரிச் சலுகைகளையும் வழங்குகிறது, ஏனெனில் சந்தாதாரர் பிரிவு 80 சிசிஇயின் கீழ் ₹1.5 லட்சத்திற்குள் பிரிவு 80 சிசிடி(1) இன் கீழ் வரி விலக்குகளைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

முள்ளங்கி கீரை இத்தனை நோய்களை தீர்க்குமா?... மருத்துவப் பயன்கள் இதோ!

Mon Mar 27 , 2023
எண்ணற்ற மருத்துவ பயன்களை உள்ளடக்கியுள்ள முள்ளங்கி கீரையின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். முள்ளங்கிக் கீரைக்கு உஷ்ணத்தை மேம்படுத்தும் திறன் கொண்டுள்ளதால், நுரையீரல் தொற்று மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் முள்ளங்கியை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம். மலச்சிக்கல், பசியின்மை, வயிற்றுவலி போன்ற பிரச்சனைகள் கொண்டவர்கள் முள்ளங்கிக் கீரையை அவர்கள் உணவு பட்டியலில் தாராளமாக சேர்த்துக் கொண்டு வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும். அரைத்த முள்ளங்கி கீரையை வெந்தயம் […]

You May Like