fbpx

மக்களே கவனம்.. இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, விழுப்புரம்‌, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர்‌, அரியலூர்‌, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, விழுப்புரம்‌, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 29,30,1 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

ஆன்லைன் கேம்ஸ் தடைசெய்வது சாத்தியமில்லை … உயர்நீதிமன்றம் மதுரை கிளை …

Tue Sep 27 , 2022
மாணவர்கள் ஆன்லைனில் கேம்விளையாடி அடிமையாகின்றனர் இதனால் ஆன்லைன் கேமுக்கு தடை செய்ய வேண்டும் என்ற தாயிடம் ஆன்லைன் கேம்ஸை தடை செய்வது சாத்தியமில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் தாய் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தனது மகள் அதிகமாக ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானர் எனவும் ஆன்லைனில் கேம்விளையாடிக்கொண்டே ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு வீட்டை விட்டுச் சென்றுவிட்டதாகவும் […]

You May Like