fbpx

மக்களே கவனம்.. வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.. எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்..

நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் ஏப்ரல் முதல் இந்தியாவின் பல இடங்களில் இயல்பான வெப்ப அலை ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் சில பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.. காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வருவதாகாவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.. குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் பிற முக்கிய நகரங்களில் மார்ச் மாதத்தில் மழை பெய்தது.., ஆனால் ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை அதிவிரைவாக அதிகரித்தது.. இது அசாதாரணமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் எப்போதும் மிகவும் வெப்பமாக இருக்கும். ஆனால் கடந்த ஆண்டை விட இந்த முறை கோடை காலம் மிக வேகமாக வந்துள்ளது. சமவெளிகளில் குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ், கடலோரப் பகுதிகளில் குறைந்தபட்சம் 37 டிகிரி மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் குறைந்தது 30 டிகிரி செல்சியஸை வெப்பநிலை அடைந்தால் வெப்ப அலை என்று கருதப்படுகிறது. 1992 க்குப் பிறகு இந்தியாவின் மிக மோசமான வெப்ப அலை 2015-ம் ஆண்டில் ஏற்பட்டது.. 2015-ல் இந்தியாவில் வெப்ப அலை காரணமாக குறைந்தது 2,081 பேர் இறந்தனர்…

இந்த காலகட்டத்தில் மத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகமான வெப்ப அலைகள் எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமேற்குப் பகுதிகள் மற்றும் தீபகற்பப் பகுதிகளைத் தவிர, ஏப்ரல் முதல் ஜூன் வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்று வானிலை நிறுவனம் கணித்துள்ளது.

மேற்கு இமயமலைப் பகுதிகள் மற்றும் வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்காளம், சிக்கிம், ஒடிசா, கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Maha

Next Post

ஓபிஎஸ் நடத்தும் மாநாட்டில் சசிகலா கலந்துகொள்கிறாரா.? அவரே சொன்ன பதில் இதோ..

Fri Apr 14 , 2023
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஓபிஎஸ், வரும் 23ம் தேதி திருச்சியில் முப்பெரும் விழா நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த மாநாட்டிற்கு சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. இந்த நிலையில் ஓபிஎஸ் அந்த மாநாட்டிற்கு அழைத்தால், அதுகுறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.. டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் சசிகலா கலந்து கொண்டார்.. அதன்பின்னர் […]

You May Like