வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் லிங்க் களை திறக்கும் போது கவனமுடன் இருக்க அரசு எச்சரித்துள்ளது.
தற்போது பல்வேறு இணையதள மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. பொதுமக்கள் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால் அதன் வழியே, மோசடிக்காரர்கள் தங்களது மோசடி வேலையை நடத்துகின்றதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தங்களது வங்கி கணக்குகளை இணைத்துள்ள மொபைல் எண், மூலம் ஸ்மார்ட் போன்களில் வங்கியிடம் இருந்து செய்தி அனுப்புவது போன்ற மோசடிகள் மூலம் ஏமாற்றப்படுகிறார்கள், இதனை கருத்தில் கொண்டு அரசாங்கத்தால் நடத்தப்படும் சைபர் தோஸ்த், ட்விட்டரில் எச்சரிக்கை பதிவை கொடுத்துள்ளது.
இதில் மக்கள் சைபர் குற்றங்களில் ஏமாறாமல் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபர் மோசடி செய்பவர்கள், வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் சுருக்கமான லிங்க்கை (URL) அனுப்புகிறார்கள், இதனை நாம் தொடும்போது/ திறக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என மக்களை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. சைபர் தோஸ்த் தனது ட்விட்டரில், சைபர் மோசடிக்காரர்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி அனுப்பியது போல ஒரு செய்தியை/ லிங்க்கை அனுப்பிய நோட்டீஸை பகிர்ந்துள்ளது.