fbpx

Rajinikanth: மீண்டும் மோடி வெல்வாரா? ரஜினிகாந்த் கொடுத்த வேற லெவல் ரியாக்‌ஷன்!

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார். முன்னதாக மோடி மீண்டும் வெற்றி பெறுவரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இன்று ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை புறப்பட்டார். கேதர்நாத் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்வதற்காக இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து இமயமலை புறப்பட்டார்.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இப்போது ஒவ்வொரு வருடமும் இமயமலை செல்கிறேன். கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் தரிசனம் செய்ய உள்ளேன்” என்று தெரிவித்தார். அப்போது மீண்டும் மோடி வெற்றிபெறுவார் என்று நினைக்கிறீர்களா என்று ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “மன்னிக்கவும், அரசியல் கேள்வி வேண்டாம்” வேண்டாம் என்று கூறினார்.

அடுத்ததாக இசையா.? கவிதையா என்ற போட்டி தமிழ் திரைப்பட உலகில் உள்ளது தொடர்பான அடுத்த கேள்விக்கு அண்ணா நோ கமெண்ட்ஸ் என தெரிவித்தார். இறுதியாக வேட்டையன் படம் சூட்டிங் முடிந்துள்ளது எப்படி வந்துள்ளது படம் என்ற கேள்வி நன்றாக வந்திருப்பதாக தெரிவித்தார். 

Read More ; “ஹிந்தி-க்கு நோ சொன்ன சூர்யா இப்போ மும்பைல செட்டில் ஆகிட்டாரு..!” – வெளுத்து வாங்கிய அந்தணன்

Next Post

'கோடிகளில் செலவு... ஆனால் பயனில்லை!' உலகின் உயரமான காலியான ஹோட்டல் இதுதான்….!!!

Wed May 29 , 2024
பல கோடிகளில் செலவு செய்து கட்டப்பட்ட ஹோட்டல் ஒன்று, 25 ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருப்பது பலருக்கும் ஏன் என்ற கேள்வியை தரும். இதனால், இன்றுவரை இந்த ஹோட்டலுக்கு ஒரு விருந்தினர் கூட வரவில்லையாம். இப்போது அந்த ஹோட்டல் என்னவாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து பார்ப்போம்.  வடகொரியாவின் தலைநகரான Pyongyang-ல் Ryugyong ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டல் வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங்-உன்னின் ஆடம்பரமான வீட்டில் இருந்து சுமார் […]

You May Like