நாய்களிடையே பரவும் புதிய வைரஸ் தொற்றால், கடந்த 3 மாதங்களில் ஆயிரக்கணக்கான நாய்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் சுமார் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு கடந்த 3 மாதங்களாக ஏராளமான தெரு நாய்கள் உயிரிழந்ததால், அதிர்ச்சி அடைந்த கால்நடைத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் இதற்கு காரணம் தெருநாய்களிடையே பரவும் கேனைன் டி வைரஸ் என்றும், இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளான நாய்களிடமிருந்து மற்ற நாய்களுக்கு பரவும் என்றும் கால்நடைத்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால், இந்த வைரஸானது மனிதர்களுக்கு பரவாது என்றும் வைரஸ் பாதிப்பால் நாய்கள் மூளை பாதிப்புக்குள்ளாவதோடு, ரேபிஸ் தொற்று போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும் எனவும் கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.