அனைத்து PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆன்லைன் மோசடி குறித்து எச்சரித்துள்ளது.. மேலும் மோசடி செய்பவர்களிடம் கவனமாக இருக்குமாறு அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.. இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை EPFO வெளியிட்டுள்ளது.. அதில், பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம் எனவும், ஆதார், பான், யுஏஎன், வங்கிக் கணக்கு அல்லது ஓடிபி போன்ற தனிப்பட்ட விவரங்களை தொலைபேசி அல்லது சமூக ஊடகங்களில் பகிருமாறு சந்தாதாரர்களை ஒருபோதும் கோருவதில்லை தெரிவித்துள்ளது.
யுஏஎன், ஆதார் அல்லது பான் எண்ணைப் பகிர அல்லது பணப் பரிமாற்றம் செய்ய அழைப்பு அல்லது குறுஞ்செய்தி வந்தால் நீங்கள் உடனடியாக நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். EPFO இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான -www.epfindia.gov.in இல் நீங்கள் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்கள் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்..
உங்கள் பான், ஆதார் மற்றும் ஆவணங்களை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது..?
உங்கள் அனைத்து ஆவணங்களையும் மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க, PF உறுப்பினர்கள் அவற்றை DigiLocker இல் வைத்திருக்கலாம்.
- படி 1: உங்கள் மொபைல் அல்லது ஆதார் எண்ணுடன் DigiLocker இல் பதிவு செய்யவும்
- படி 2: பதிவு செய்தவுடன், உங்கள் மொபைல் எண் அல்லது 12 இலக்க ஆதார் எண் OTP மூலம் அங்கீகரிக்கப்படும்
- படி 3: அடுத்து, இரண்டு காரணி அங்கீகாரத்திற்காக உங்கள் பாதுகாப்பு பின்னை அமைக்கவும்.
- படி 4: ‘Upload Documents’ என்பதற்குச் சென்று, டிஜிலாக்கரில் நீங்கள் வைத்திருக்க விரும்பும் பதிவுகளைப் பதிவேற்றலாம்.
- படி 5: ஆவணங்களை PDF, JPEG மற்றும் PNG வடிவத்தில் பதிவேற்றலாம்.
- படி 6: DigiLocker இல் அதிகபட்சம் 10 MB கோப்புகள் பதிவேற்ற அனுமதிக்கப்படும்.