பிஎஃப் பயனர்கள் அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்வதற்கான காலக்கெடுவை EPFO நீட்டித்துள்ளது
ஓய்வூதியத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதால், வேலை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் பணம் என்பது மிகவும் முக்கியமானது. மேலும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கூட பிஎஃப் பணத்தின் நன்மைகளை பெற முடியும்.. பிஎஃப் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் EPFO வழங்குகிறது.. EPFO அமைப்பில் சுமார் 7 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.. ஒவ்வொரு மாதமும் ஊழியர் சார்பில் குறிப்பிட்ட தொகையும், அவர் புணிபுரியும் நிறுவனத்தின் சார்பில் குறிப்பிட்ட தொகையும் சேர்த்து பிஎஃப் பிடித்தம் செய்யப்படும்.. இந்த தொகையே பிஎஃப் பங்களிப்பு என்று அழைக்கப்படுகிறது.. அந்த வகையில் பிஎஃப் சந்தாதாரர்களின் மாத சம்பளத்தில் இருந்து பிஎஃப் தொகை கழிக்கப்படும் போது, உங்கள் கணக்கில் EPF பங்களிப்பை டெபாசிட் செய்ய வேண்டும்.
இந்நிலையில் பிஎஃப் உறுப்பினர்கள், தங்கள் நிறுவனத்துடன் இணைந்து அதிக ஓய்வூதியத்தைத் தேர்வுசெய்து விண்ணப்பிக்கலாம் என்று EPFO அமைப்பு தெரிவித்துள்ளது.. EPFOவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதிக ஓய்வூதிய விருப்பத்தைப் பெறுவதற்கான கடைசி தேதி மே 3, 2023 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியத்திற்கு சந்தாதாரர்கள் மற்றும் நிறுவனங்கள் கூட்டாக விண்ணப்பிக்க EPFO கடந்த வாரம் வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
அதிக ஓய்வூதியம் பெற யார் தகுதியானவர்கள்? சம்பளத்தில் ரூ. 5,000 அல்லது 6,500க்கு மேல் பிஎஃப் தொகைக்கு பங்களிக்கும் ஊழியர்கள் அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்யலாம்.. அவர் செப்டம்பர் 1, 2014 க்கு முன் EPFO உறுப்பினராக இருக்க வேண்டும்..
உயர் ஓய்வூதியத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது..? அதிக ஓய்வூதியத்திற்கான விண்ணப்பங்களை ஆணையரால் குறிப்பிடப்பட்ட முறையில் இபிஎஃப்ஓவின் பிராந்திய அலுவலகத்தில் முதலாளி மற்றும் பணியாளர் இணைந்து சமர்ப்பிக்க வேண்டும்..
முன்னதாக டிஜிட்டல் முறையில் அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும் வகையில் புதிய இணையதள முகவரி அறிவிக்கப்படும் என்று EPFO அமைப்பு கூறியிருந்தது.. அந்த இணையதளத்தில். உள்நுழைந்த பிறகு, விண்ணப்பதாரர்களுக்கு ரசீது எண் வழங்கப்படும்.
பின்னர் அந்த விண்ணப்பம், சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உள்நுழைவு போர்ட்டலுக்கு திருப்பி விடப்படும், அதன் டிஜிட்டல் சரிபார்ப்பு மேலும் செயலாக்கத்திற்கு மேற்கொள்ளப்படும். பின்னர், ஓய்வூதிய நிதியில் நிலுவைத் தொகை பெறப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க ஆய்வு செய்யப்படும் மின் கோப்பும் உருவாக்கப்படும். விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும்/அல்லது தபால் மூலம் தெரிவிக்கப்படும்.