fbpx

பிஎஃப் பயனர்கள் இனி டிஜிலாக்கர் மூலம் இதை செய்யலாம்.. EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) டிஜி லாக்கர் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது.. பிஎஃப் உறுப்பினர்கள் இப்போது டிஜிலாக்கர் சேவையின் மூலம் தங்கள் முக்கியமான கோப்புகளை அணுகலாம் என்று அறிவித்துள்ளது. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இபிஎஃப்ஓ இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.. அந்த பதிவில் “உறுப்பினர்கள் டிஜிலாக்கர் மூலம் யுஏஎன் கார்டு, பென்ஷன் பேமென்ட் ஆர்டர் (பிபிஓ) மற்றும் திட்டச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம்.. அனைத்து ஆவணங்களும் டிஜிலாக்கரில் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன..” என்று தெரிவித்துள்ளது.

UAN எண்ணை பிஎஃப் கணக்கின் முக்கிய தகவல்களை கண்காணிக்க பயன்படுத்த முடியும். இதே போல் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தைப் பெற அவர்களின் 12 இலக்க ஓய்வூதியக் கொடுப்பனவு ஆணை (PPO) எண்ணைக் கொண்டிருக்க வேண்டும்.

இதன் காரணமாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) EPS சான்றிதழை வழங்குகிறது, இது வருங்கால வைப்பு நிதி உறுப்பினரின் சேவை வரலாறு பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. பணிபுரிந்த ஆண்டுகளின் எண்ணிக்கை, குடும்பத் தகவல்கள் மற்றும் பணியாளர் இறந்தால் ஓய்வூதியம் பெறத் தகுதிபெறும் குடும்ப உறுப்பினர் உள்ளிட்ட நபரின் சேவை குறித்த தகவல்கள் அதில் இடம்பெற்றிருக்கும்..

DigiLocker என்பது “டிஜிட்டல் இந்தியா” திட்டத்தின் ஒரு அங்கமாகும்.. இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மையான திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

அசால்ட் செய்த ஹர்திக் பாண்டியா..! கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி..!

Mon Aug 29 , 2022
ஜடேஜா – ஹர்திக் பாண்டியாவின் அபார பேட்டிங் பார்ட்னர்ஷிப்பால் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது இந்தியா. ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் நிர்ணயித்த 148 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அறிமுக வீரர் நசீம்ஷா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலே இந்தியாவின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் தான் சந்தித்த முதல் பந்திலே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். […]
IND vs SL: வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா..! அணியில் அதிரடி மாற்றங்கள்..!

You May Like