சேலம் மாவட்டத்தில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் மூலம் வெறிநோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வெறிநோயை மனிதர்களுக்கு ஏற்படாமல் தடுக்கவும், செல்லப்பிராணிகளுக்கு ஏற்படாமல் தடுக்கவும் கால்நடை பராமரிப்புத்துறையும், மருந்துகள் துறையும் இணைந்து மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இதில் செல்லப்பிராணிகள், தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு தடுப்பூசியும். தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான அறுவை சிகிச்சை முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சியின் சார்பாக இரண்டு பிரத்யோக அறுவைசிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. இதில் மாதம் 1000- 1500 தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றிற்கு வெறிநோய் தடுப்பூசியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையும், ரெயின் (RAIN Resuing Animal in Needs என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து 17.12.2024 அன்று எடப்பாடி, வெள்ளாளபுரம், தேவூர், காடையாம்பட்டி, மகுடஞ்சாவடி), 18.12.2024 அன்று டேனிஷ்பேட்டை, கொளத்தூர், குட்டப்பட்டி, தாரமங்கலம், காமலாபுரம். ஜலகண்டாபுரம், ஓமலூர், 19.12.2024 அன்று சிங்கிபுரம், திப்பம்பட்டி, மேட்டுப்பட்டிதாதானூர், வேடுகாத்தாம்பட்டி, பெருமாகவுண்டம்பட்டி, 20.12.2024 அன்று மஞ்சினி, ஊனத்தூர், தம்மம்பட்டி, ஏத்தாப்பூர் கிராமங்களில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் மூலம் வெறிநோய் தடுப்பூசிப்பணி இலவசமாக மேற்கொள்ள உள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.