வீட்டின் முன்பு குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தவர்களுக்கு அடுத்த சில நிமிடங்களில் நடந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கையில் கோடாரியுடன் வந்த நபர், அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்களை விரட்டியதுடன், ஒரு நாயை பிடித்து தாக்கிக் கொன்றுள்ளார். இதைத் தடுக்க முயன்றவர்களும் அவரது ஆவேசத்துக்கு ஆளாகியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. திங்கட்கிழமை மாலை 5.15 மணியளவில் நரேந்திர அகிர்வார் தனது […]

மத்திய பிரதேசத்தில் மருத்துவமனையில் இருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் இருந்த பை காணாமல் போனதாக எழுந்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, எதிர்பாராத திருப்பமாக நாய் ஒன்று அந்த பையை தூக்கிச் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் பையை மருத்துவமனை வளாகத்திலேயே கண்டுபிடித்து, அதிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை பத்திரமாக மீட்டுள்ளனர். மந்த்சோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் […]

சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இணையதளம் வாயிலாக செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது. சென்னையில் நிலவும் வெறிநாய்க்கடி பிரச்சனைக்கு தீர்வு காணும் முறையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பதிவு செய்தல், வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் மைக்ரோ சிப்பிங் பொருத்துதல் ஆகியவை […]

நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் கால்நடை துறை வெளியிட்டுள்ள அரசாணையில், ‘நோய்வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணை கொலை செய்யலாம். இந்த பணியை பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் செய்ய வேண்டும். கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் சரியான முறையில் அடக்கம் […]