ரேஷன் கடைகளில் இலவச தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது..
கொரோனா காலத்தில் ஏற்பட்ட வேலை இழப்பால் ஏழைகள் பாதிக்கப்படாமல் இருக்க பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்தது.. இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.. இதுவரை 5 முறை இந்த திட்டத்தை மத்திய அரசு கால நீட்டிப்பு செய்துள்ளது..
அதன்படி இத்திட்டம் செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.. இந்நிலையில் இலவச உணவு தானிய திட்டத்தை மேலும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இந்த திட்டத்தில் 80 கோடி பேருக்கு வழங்குவதற்கான தானியங்கள் கையிருப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.. எனவே இந்த திட்டத்தை நீட்டிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..