fbpx

நேரில் செல்ல முடியாத ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! அமைச்சர் சொல்லிய குட் நியூஸ்…!

ரேஷன் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாத மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம், இன்றியமையாப் பொருட்களை பெறும் திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது.

ரேஷன் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாத முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம், இன்றியமையாப் பொருட்களை பெறும் திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது. இதன் மூலம், 3,15,437 குடும்ப அட்டைதாரர்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்பட்டு 2,76,733 குடும்ப அட்டைதாரர்கள், பிரதிநிதிகள் மூலமாக பொருள்களை பெறுகின்றனர் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 15 லட்சத்து 79 ஆயிரத்து 393 ரேசன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பெறப்பட்ட 2 லட்சத்து 92 ஆயிரத்து 43 விண்ணப்பங்களில் 9 ஆயிரத்து 784 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ஆதார் எண்ணுடன் சரிபார்க்கப்பட்டு ரேசன் அட்டைகள் அச்சிடும் நிலையில் உள்ளன. மீதமுள்ளவற்றை பரிசீலித்து ஆய்வு செய்து தகுதியுள்ள நபர்களுக்கு ரேசன் அட்டைகள் வழங்கப்படும்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த புகார்கள் குறித்து அமைச்சர் கூறியதாவது; சில மாதங்களுக்கு முன்பு டோர் டெலிவரி திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 4.55 லட்சம் கார்டுகள் ஸ்பீட் போஸ்ட் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. “சுமார் 9,500 புதிய அட்டைகள் அங்கீகரிக்கப்பட்டு இப்போது விநியோகத்திற்கு தயாராக உள்ளன,” என்று கூறினார்.

English Summary

Attention ration card holders who cannot go in person

Vignesh

Next Post

கோவிட் காலத்தில் 1.64 லட்சம் தொழிலாளர்களுக்கு நிதியுதவி கிடைக்கவில்லை..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்...!

Sun Jun 30 , 2024
1.64 lakh workers are not getting financial support during Covid

You May Like