fbpx

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. புதிய விதி அறிமுகம்.. விவரம் உள்ளே..

தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கியின் YONO செயலியில், வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் மட்டுமே உள்நுழைய முடியும்.. அதாவது, இப்போது நீங்கள் வேறு எந்த எண்ணிலிருந்தும் வங்கியின் சேவையைப் பெற முடியாது. ஆன்லைன் வங்கி மோசடியில் இருந்து வாடிக்கையாளர்களை காப்பாற்ற வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது..

எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடியைக் கருத்தில் கொண்டு, வங்கி இந்த புதிய அப்டேட்டை YONO செயலியில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான வங்கி அனுபவத்தைப் பெறுவார்கள், அதே நேரத்தில் அவர்கள் ஆன்லைன் மோசடிகளுக்கு இரையாவதைத் தவிர்க்கலாம். இதுமட்டுமின்றி வாடிக்கையாளரின் கணக்கின் பாதுகாப்பும் அதிகரிக்கும்.

மேலும் YONO செயலியில் புதிதாக பதிவு செய்ய விரும்பினால் வாடிக்கையாளர் தனது மொபைல் எண்ணை வங்கியில் பதிவு செய்த அதே போனையே பயன்படுத்த வேண்டும் என்று வங்கி ஏற்கனவே எஸ்பிஐ வங்கி அறிவித்திருந்தது… அதாவது, YONO கணக்கு வைத்திருப்பவர்கள் வேறு எந்த எண்ணிலும் உள்நுழைய முயலும்போது அவர்கள் எந்தப் பரிவர்த்தனையையும் செய்ய எஸ்பிஐ அனுமதிக்காது. அதாவது, இப்போது வேறு யாரும் உங்கள் கணக்கில் தவறுதலாக நுழைய முயற்சிக்க முடியாது.

இதுமட்டுமல்லாமல், தொலைபேசி எண்ணுக்கும் வங்கி விதியை உருவாக்கியுள்ளது. புதிய விதியின் கீழ், நீங்கள் எந்த செல்போன் மூலமாகவும் பயன்பாட்டில் உள்நுழைய முடியாது, இப்போது நீங்கள் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணின் அதே மொபைலில் இருந்து YONO செயலியின் வசதியைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்து வருவதாக வங்கி தெரிவித்துள்ளது.

Maha

Next Post

தங்கம் விலை இன்றும் உயர்வு... எவ்வளவு தெரியுமா..?

Sat Jul 2 , 2022
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.38,336க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென […]
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

You May Like