fbpx

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு..!! தேர்வு தேதி அதிரடி மாற்றம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

வனப் பாதுகாவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகளுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உதவி வனப்பாதுகாவலர் (தொகுதி-1ஏ பணிகள்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (தொகுதி-1சி பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் கணினி வழித்தேர்வாக நடத்தப்படவுள்ளது. இதனால், ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு, 29 மாவட்டங்களில் ஏப்ரல் 20ஆம் தேதி காலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறவிருந்த உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு, 26 மாவட்டங்களில் மே 3ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 2 தேர்வுகளுக்குமே முதல்நிலைத் தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வு மையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

இன்பநிதியின் சர்ச்சை புகைப்படம்..!! எல்லாம் ஒரு லிமிட் தான்..!! அப்பாவாக தக்க பதிலடி கொடுத்த உதயநிதி..!!

Sun Mar 12 , 2023
சமீப காலமாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்,  நடிகர் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் என்பதை தாண்டி, தன்னுடைய தாத்தா மற்றும் அப்பா பாணியில் அரசியலில் திடீரென குதித்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி வெற்றி வாகை சூடியதை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் இவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் […]

You May Like