தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் நிதியாளர் பதவிகளுக்கான 5 காலிப்பணியிடங்களுக்கு 11.11.2022இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 10ஆம் தேதி வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த தேர்வானது மார்ச் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கணினி வழி தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது. www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.