fbpx

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 1,2,4 தேர்வு தேதிகள் அறிவிப்பு..! தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றம்… முழு விவரம்..!

குரூப்-1, குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

6,244 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட புதிய ஆண்டுதிட்ட அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகளை தவிர மற்ற தேர்வுகளை ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வுகளாக ஒன்றாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2, 2ஏ தேர்வுக்கு முதல்நிலை தேர்வு ஒன்றாகவும், பிரதான தேர்வு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது. மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2024ம் ஆண்டில் நடத்தவுள்ள போட்டித்தேர்வுகளின் அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில், மொத்தம் 19 வகையான பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது, தேர்வு முறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 19 வகையான பணிகளை 8 வகையான போட்டித் தேர்வுகளாக டிஎன்பிஎஸ்சி மாற்றியமைத்துள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக, குரூப் 2, 2 ஏ தேர்வுக்கு முதல்நிலை தேர்வு ஒன்றாகவும், பிரதான தேர்வு தனித்தனியாக நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதேபோன்று, குரூப் 4, 2, 1 போன்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு போன்று ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் பணிகள் தேர்வையும் டிஎன்பிஎஸ்சி கொண்டு வந்ததுள்ளது. இதன்கீழ், இந்தாண்டு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

மேலும் Combined Technical Services Examination – Degree /Post Graduate Degree Level (Interview Posts) பணியின் கீழ் 105 காலிப்பணியிடங்களும், Combined Technical Services Examination – Degree / Post Graduate Degree Level (Non-Interview Posts) பணியின் கீழ் 605 காலிப்பணியிடங்களும், Combined Technical Services Examination – Diploma / ITI Level பணியின் கீழ் 730 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. 6,244 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெற இருக்கிறது. 90 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூலை 13ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 2030 பணியிடங்களுக்கான குரூப் II &II ஏ தேர்வுகள், செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more: பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” – இளையராஜாவுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Rupa

Next Post

இன்று முதல் JioCinema-வில் ஐபிஎல் போட்டிகளை பார்க்க கட்டணம்..! முழு விவரம்..!

Thu Apr 25 , 2024
ஒட்டுமொத்த இந்தியாவும் 2024 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக பார்க்க ஜியோ சினிமா ஆப்பை (Jio Cinema) பயன்படுத்தி கொண்டிருக்கும் வேளையில், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ சினிமா ஆப்பிற்கான புதிய கட்டண சந்தா திட்டத்தை ஏப்ரல் 25ஆம் தேதியன்று அறிமுகப்படுத்த உள்ளது. எக்ஸ் (X) தளம் வழியாக, ஜியோ சினிமா ஆப்பிற்கான புதிய சந்தா திட்டத்தின் வருகையை ஜியோ நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. இது குறித்த […]

You May Like