fbpx

வேலையில்லா இளைஞர்கள் கவனத்திற்கு…! நாளை காலை 8 மணி முதல் சென்னையில் சிறப்பு முகாம்…!

சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; சென்னை மாதாவரத்தில் உள்ள ஜெய்கோபால் அகர்வால் அகர்சன் கல்லூரியில் வருகிற செப்டம்பர் 16 ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 150 க்கும் மேற்பட்ட முன்னனணி நிறுவங்கள் கலந்து கொண்டு 15000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

மேலும், இந்த பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்களும், பட்டதாரிகளும், ஐ.டி.ஐ தொழிற்கல்வி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் இலவசமாக பங்குபெறலாம். இந்த முகாமில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள், வங்கிக்கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படவுள்ளன.

தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்து இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 044 – 24615160 என்ற எண்ணிலோ அல்லது pjpsanthome@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ஆணுடன் சேராமலேயே முட்டையிட்டு குஞ்சு பொரித்த பறவை!… எதிர்காலத்தில் மனித குலத்திற்கும் இதே நிலை வந்துவிடுமா?

Fri Sep 15 , 2023
எந்த ஒரு உயிரினம் உருவாகவும் இனப்பெருக்கம் அவசியம். அது பால்இனப்பெருக்கமாக இருக்கலாம், அல்லது பாலிலா இனப்பெருக்கமாக இருக்கலாம். பால் இனப்பெருக்கத்தை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதனால் நாம் பாலிலா இனப்பெருக்கத்தை பற்றி தெரிந்து கொள்ளவோம். எந்த ஒரு உ யிரின வகையில் ஆண் இனம் மிக குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலும் இருக்கிறதோ அந்த இனத்தை சேர்ந்த பெண் உ யிரினம் ஆண் வி ந்தணுவின் துணை இல்லாமலேயே தனது […]

You May Like