fbpx

தீபாவளியை முன்னிட்டு தென்காசி-வாரணாசி இடையே சிறப்பு ரயில்…..! புதிய அறிவிப்பை வெளியிட்டது தெற்கு ரயில்வே…..!

பொதுவாக பண்டிகை காலம் என்று வந்துவிட்டால் மாநில அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல மத்திய அரசு சார்பாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இது போன்ற சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டால் அதற்கான பயண சீட்டுகள் அறிவிக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துவிடும்.

அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்காசி மற்றும் வாரணாசி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தீபாவளி கங்காஸ்நான யாத்திரைக்காக தென்காசியில் இருந்து பாரத் கௌரவ் என்ற சிறப்பு ரயில் வரும் நம்பர் மாதம் 9ம் தேதி புறப்பட்டு, 11ஆம் தேதி வாரணாசிக்கு சென்றடையும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அதன் பிறகு மறுமார்க்கமாக வாரணாசியில் இருந்து நவம்பர் மாதம் 13ஆம் தேதி புறப்பட்டு, தென்காசிக்கு நவம்பர் மாதம் 17ஆம் தேதி வந்தடையும். இந்த சிறப்பு ரயில் ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், கும்பகோணம், செங்கல்பட்டு, சென்னை, தாம்பரம் போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

Kavin: பிக்பாஸ் கவினின் காதலி இவர் தானா..? அடடே டீச்சராமே..!! ரசிகர்கள் வாழ்த்து..!!

Wed Aug 2 , 2023
விஜய் டிவியில் சீரியல்களை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பெருமளவில் பிரபலமடைந்தார் நடிகர் கவின். 2017ஆம் ஆண்டு வெளியான சத்ரியன், நட்புனா என்னான்னு தெரியுமா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த கவின், லிப்ட் திரைப்படம் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் கவின் வெள்ளித்திரையிலும் கவனம் பெறத் தொடங்கினார்.‌ லிப்ட் படத்தைத் தொடர்ந்து ஆகாஷ் வாணி […]

You May Like