கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அம்மாவட்டத்தில் இருக்கும் கூட்டிக்கல், வழுர் ஆகிய கிராமங்களில் உள்ள பன்றி பண்ணைகளில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. பன்றிக்காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டு உள்ளதால் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, இந்த பண்ணைகளின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் பன்றிகளை அழித்து எரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நோய் பாதித்த பண்ணைகளின் பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கால்நடைகளை முழுமையாக ஆய்வு செய்ய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பன்றிகள் மற்றும் தீவனங்களை கொண்டு செல்வதற்கு தடை விதிப்பதோடு, பன்றி இறைச்சி விற்பனை மற்றும் விநியோகத்திற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இது குறித்து கோட்டயம் மாவட்ட ஆட்சியர் ஜான் சாமுவேல் கூறுகையில், பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ள பண்ணைகளில் இருக்கும் பன்றிகளை கொல்ல உத்தரவிடப்பட்டு உள்ளது. 1 கிலோ மீட்டர் சுற்றளவில் காணப்படும் பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளையும் அழிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட, மாவட்ட கால்நடை மருத்துவ அதிகாரி பணியமர்த்தப்பட்டு உள்ளார். 10 கி.மீ., தொலைவில் உள்ள அனைத்து பண்ணைகளும் தீவிர கண்காணிப்பில் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன.
பன்றி இறைச்சி விற்பனைக்கும், தொற்று கண்டறியப்பட்டுள்ள இடத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார். ASF ஆனது H1N1 அல்லது பன்றிக் காய்ச்சலிலிருந்து வேறுபட்டது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர், ஏனெனில் இது பன்றிகளை மட்டுமே பாதிக்கிறது மற்றும் மனிதர்கள் அல்லது பிற விலங்குகளுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது. இருப்பினும், ASF க்கு இதுவரை தடுப்பூசிகள் அல்லது தடுப்பு சிகிச்சைகள் எதுவும் கிடைக்காததால், இது குறிப்பிடத்தக்க பன்றி இறப்பை ஏற்படுத்தும் என்று அதிகாரிகல் கூறுகின்றனர்.
Read more ; சட்டப்பேரவையில் அதிமுக-வினர் பேசுவதை நேரலையில் காட்டுவதில்லை.. காரணம் ஆளும் கட்சிக்கு பயம்..!! – EPS