ஆட்டோ எக்ஸ்போ 2023 நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.
கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் கார்களை விளம்பரப்படுத்த நடத்தப்படும் கண்காட்சி தான் இந்த ஆட்டோ எக்ஸ்போ 2023. இதில் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் பங்கேற்று அதி நவீன கார்களை அறிமுகம் செய்கின்றன. இந்த நிலையில் அங்கு பார்வையாளர்களுக்கான டிக்கெட் விலை நிலவரம் வெளியாகி உள்ளது. ஆட்டோ எக்ஸ்போ ஒவ்வொரு 2 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வாகும். ஆனால் கொரோனா போன்ற பிரச்னைகளால் ஆட்டோ எக்ஸ்போ கடந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஆட்டோ எக்ஸ்போ 2023 இரண்டு முக்கிய இடங்களில் நடைபெறுகிறது. புது டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் மற்றும் கிரேட்டர் நொய்டாவிலும் நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் தொடங்கிய எக்ஸ்போ ஜனவரி 18 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் இரண்டு நாட்கள் மீடியாக்கள் மட்டுமே பங்கேற்றன. இந்நிலையில் பொதுமக்கள் இந்த எக்ஸ்போவில் பார்வையிட நாளை முதல் 18 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை காலை 11 மணிக்கு ஆட்டோ எக்ஸ்போ தொடங்கும் என்றாலும் ஜனவரி 14 & 15 ஆகிய இரு நாட்களில் இரவு 8 மணியுடனும், ஜனவரி 16 & 17 இரவு 7 மணியுடனும், இறுதி நாளான ஜனவரி 18-ஆம் தேதி மாலை 6 மணியுடனும் ஆட்டோ எக்ஸ்போ நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்போ 2023 ஷோவிற்கான டிக்கெட் விலை இன்று ரூ.750-ஆகவும். ஜனவரி 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் ரூ.475 ஆகவும். ஜனவரி 16 முதல் 18 ஆகிய கடைசி 3 நாட்களில் டிக்கெட் விலை ரூ.350 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.