fbpx

உயரப்போகும் ஆட்டோ கட்டணம்!!! எரிபொருள் விலைக்கு ஏற்ப நிர்ணயம் – அரசு பதிலளிக்க உத்தரவு

எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு, டீசல் மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து வருவதாகவும், ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக கட்டணம் மறுநிர்ணயம் செய்யபடவில்லை என சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வி. ராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் எரிபொருள் விலை ஏற்றத்தால் ஆட்டோ ஓட்டுனர்கள் தாங்களாகவே கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாகவும், எரிபொருள் விலைக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும், அந்த உத்தரவின் அடிப்படையில் எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்க கோரியும், மின்னணு மீட்டர்களில் தானாகவே கட்டணத்தை மாற்றிக்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்தையும் அமல்படுத்த வேண்டுமென கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, நான்கு வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Kathir

Next Post

கவனம்..! இந்த தேதிகளில் எல்லாம் வங்கி இயங்காது...! விடுமுறை தினமாக இருக்கும் என அறிவிப்பு...!

Thu Dec 1 , 2022
டிசம்பரில் வங்கிச் செயல்பாடுகளைக் கொண்ட வங்கி வாடிக்கையாளர்கள், வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் விவரங்களை பார்க்கலாம். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, 2022 டிசம்பரில் பல்வேறு மாநிலங்கள் மொத்தம் ஒன்பது நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஒன்பது விடுமுறை நாட்களைத் தவிர, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில், பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய […]

You May Like