fbpx

அவதார் – உக்ரைன் போர் வரை, கவனம் ஈர்த்த தூத்துக்குடி “கிறிஸ்துமஸ் குடில்”..!

தூத்துக்குடியை சேர்ந்தவர் ஓவிய ஆசிரியர் இசிடோர், இவர் கடந்த 20 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது இல்லத்தில் அந்த ஆண்டு நடைபெறும் பல்வேறு சம்பவங்களின் பிரதிபலிப்பை மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “கிறிஸ்மஸ் குடில்” அமைப்பது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஓவியர் இசிடோர் தனது மகள் அர்ச்சனாவுடன் இணைந்து கிறிஸ்மஸ் குடில் அமைத்துள்ளார். இந்த கிறிஸ்மஸ் குடிலில் உலகம் முழுவதும் மக்களிடம் இரக்க குணம் பரவ வேண்டும் என்ற அடிப்படையிலும் உலகம் முழுவதும் ஒற்றுமை திகழ வேண்டும் என்ற அடிப்படையிலும் அமைத்துள்ளார்.

இந்த கிறிஸ்மஸ் குடிலில் பாலன் பிறப்பை உணர்த்தும் வகையில் குடில் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவதார் திரைப்பட கதாபாத்திரங்கள், உக்கிரேன் போரால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, தற்போது பெற்றோர்களை அனாதை இல்லங்களில் குழந்தைகள் விடுவதை தவிர்த்து அழகான ஒற்றுமையான குடும்பமாக வாழ்வது குறித்தவிழிப்புணர்வு ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விழிப்புணர்வு கிறிஸ்மஸ் குடிலை ஏராளமானோர் பார்த்து பாராட்டி செல்கின்றனர்.

Kathir

Next Post

4ம் வகுப்பு மாணவனை கொன்ற ஆசிரியர்.. இந்த காரணத்திற்காக பிஞ்சு உயிர்போன பரிதாபம்..!

Thu Dec 22 , 2022
கர்நாடகா மாநிலம் பகுதியில் உள்ள கீதா (34) எனபவர் தாலுகா, ஹட்லி கிராமத்தில் வசித்த வருகிறார். இவருக்கு பாரத் என்ற 9 வயது மகன் உள்ளார். பரத் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் முத்தப்பா, பரத்தை தாக்கி, முதல் மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்றார். மேலும் கீதாவையும், ஆசிரியர் சங்கனகவுடாவையும் தாக்கிவிட்டு தலைமறைவானார் முத்தப்பா. இந்த […]

You May Like