கேரள மாநிலம் கோட்டயத்தில் பறவைக் காய்ச்சல் பரவியதையடுத்து 5,000 வாத்து, கோழிகள் அழிக்கப்பட்டன. பறவைக் காய்ச்சல் அல்லது ஏவியன் இன்ஃப்ளுவன்சா என்பது ஒரு வைரஸ் தொற்று. இது முதன்மையாக பறவைகளை பாதிக்கிறது, அதோடு கூட மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட பறவையின் மலம், மூக்கு, வாய் அல்லது கண்களிலிருந்து சுரக்கும் திரவமானது கோழி அல்லது பறவைகளுடன் தொடர்பு கொள்ளும் மனிதர்களுக்கும் அவை பரவுகின்றன. ஆகவே இந்த பாதிக்கப்பட்ட கோழி மற்றும் முட்டைகளை உட்கொள்வதும் நோயை ஏற்படுத்தும்.
இந்நிலையில் கேரளா மாநிலம் கோட்டயம் அருகே உள்ள சில கிராமங்களில் பறவைக் காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து வேச்சூர், நீண்டூர் மற்றும் ஆர்ப்பூக்கரை ஊராட்சிகளில் நேற்று மொத்தம் 5000 கோழிகள், வாத்துகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், அங்கிருந்து பதப்படுத்தப்பட்ட கோழிகளை ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது