உள்நாட்டு விமான போக்குவரத்து துறைக்கு ரூ.17,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று ஏஜென்சி ஒன்று பகீர் கணிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் கடன் மதிப்பு மற்றும் , முதலீடு பற்றிய தகவல் வழங்குவழ தொடர்பான Icra ஏஜென்சி உள்நாட்டு விமான போக்குவரத்தில் வருங்காலத்தில் எப்படி இருக்கும் என கணிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து துறைக்கு சுமார் ரூ.17,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என்ற கணிப்பை வெளியிட்டுள்ளது. விமானத்திற்கான எரிபொருள் செலவு, பிற நிறுவனங்களுடனான போட்டி , சர்வதேச கடன் போன்றவற்றை சுட்டிக் காட்டி தகவல் வெளியிட்டுள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்து பிரிவில் ஆண்டுக்கு ஆண்டு 52-54 சதவீதம் வளர்ச்சி இந்த துறைக்கு சாதகமாக இருக்கும்.

கோவிட் தொற்று குறைந்து வருவதால் விமான தொழில்துறைக்கு இது ஊக்கமளிக்கும். தொற்று நோய் பாதிப்பின்போது இருந்த பயணிகள் வருகை 2.4 மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும் கோவிட் தொற்று நோய் பாதிப்பு நிலைக்கு முந்தையை நிலையை ஒப்பிட்டு பார்க்கும் போது இது 7 சதவீதம் குறைவுதான். இயல்பு நிலைக்கு தற்போது மாறி வருவதால் உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து 52 முதல் 54 சதவீத வளர்ச்சியைக் காணும் ..
’’ உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து விரைவாக சீரடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது வணிகப் பயணப் பிரிவுகளில் தேவையை மேம்படுத்துவதன் மூலம் ’’ நிலைமையை சரி செய்ய முடியும் என Icra தெரிவிக்கின்றது. இதில் முன்னேற்றம் இருந்தாலும் இழப்பு ரூ.17000 கோடி ஏற்படும் என கணிக்கப்படுகின்றது. எரிபொருள் விலை ஏற்றம் , மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். என Icra தெரிவித்துள்ளது.