இந்திய கடலோர காவல் படை என்பது கடல் வழியே இந்திய நாட்டிற்குள் ஊடுருவும் சட்டவிரோதமான தீவிரவாத கும்பல் மற்றும் போதை பொருள் கடத்தல் போன்ற பல்வேறு விவகாரங்களை தடுப்பதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம்.
அந்த நிறுவனத்தில் அவ்வப்போது காலி பணியிடங்கள் ஏற்பட்டால் அதற்கான அறிவிப்புகளை இந்திய கடலோர காவல் படை வெளியிடும் அப்படி வெளியிடும்போது அதனை பார்த்து, அதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
அந்த வகையில், இந்திய கடலோர காவல் படையானது தற்சமயம் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதில் Store keeper, engine driver, civilian MT driver, and others பணிகளுக்கு என்று 10 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆர்வமாக இருப்பவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனத்தின் பெயர்: இந்திய கடலோர காவல்ப் படை
பதவியின் பெயர்: store keeper engine driver civilian MT driver and others
கல்வி தகுதி: 10ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ
வயதுவரம்பு: 25 வயது முதல் 30 வயது வரையில்.
கடைசி தேதி: 29 8 2023
மேலும் இது பற்றி கூடுதல் விவரங்கள் அறிவதற்கு: indiancostguard.gov.in