fbpx

#GST : ஜூன் மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் அதிகரிப்பு…! மத்திய அரசு தகவல்…

இந்தியாவில் ஜூன் மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1,44,616 கோடியாக உள்ளது.

நாடு முழுவதும் ஜூன் மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1,44,616 கோடியாகும். இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.25,306 கோடி மாநில ஜிஎஸ்டி ரூ.32,406 கோடி, ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி ரூ.75,887 கோடி (பொருள்கள் இறக்குமதி மீது வசூலிக்கப்பட்ட ரூ.40,102 கோடி உட்பட), செஸ் வரி ரூ.11,018 கோடி சரக்குகளின் இறக்குமதி மீது வசூலிக்கப்பட்ட ரூ.1,197 கோடி உட்பட). 2022 ஏப்ரல் மாதத்தின் வசூல் ரூ.1,67,540 கோடிக்கு அடுத்தபடியாக 2022 ஜூன் மாதத்தில் 2-வது அதிகபட்ச ஜிஎஸ்டி மொத்த வசூல் ஆகியுள்ளது.

கடந்த ஆண்டு இதேமாதத்தில் ரூ.92,800 கோடி என்று இருந்த நிலையில், 2022 ஜூன் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் 56% அதிகமாகும். கடந்த ஆண்டு இதே மாதத்தில் உள்நாட்டு பரிவர்த்தனைகளிலிருந்து ஈட்டப்பட்ட வருவாய் 56% அதிகமாகும். பொருள்களின் இறக்குமதியிலிருந்து இம்மாதத்தின் வருவாய் 55% அதிகமாகும். ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததில் இருந்து 5-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடி என்ற அளவைக்கடந்து மாதாந்திர ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.

கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் சராசரி மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.10 லட்சம் கோடி என்பதற்கு மாறாக நிதியாண்டு 2022-23-ன் முதல் காலாண்டில் சராசரி மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.51 லட்சமாக இருந்தது.  இது 37% அதிகரிப்பை காட்டுகிறது. தமிழ்நாட்டில் 2021 ஜூன் மாதத்தில் ரூ.4,380 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வருவாய், 83% அதிகரித்து 2022 ஜூன் மாதத்தில் பொருள்களின் இறக்குமதி மீதான ஜிஎஸ்டி வரி உட்படுத்தப்படாமல் ரூ.8,027 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read; #4th Wave: முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்… இல்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும்..! ஆட்சியர் உத்தரவு…!

Vignesh

Next Post

Tamilnadu Open University: இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...!

Sat Jul 2 , 2022
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை, முதுகலை மற்றும் இதரப் படிப்புகளுக்கு 2022-23-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. சேர்க்கைக்கான கல்வித்தகுதி மற்றும் கட்டணம் சம்பந்தப்பட்ட விவரங்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்தின் https://tnou.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. […]

You May Like