நம்முடைய செய்தி நிறுவனத்தில் நாள்தோறும் பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறோம், அந்த வகையில், இன்றும் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதனை வாசகர்கள் பார்த்து, படித்து, தெரிந்து கொண்டு, இந்த வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அந்த வகையில் இன்று, PGIMER ஆணையத்தில், காலியாக இருக்கின்ற
Senior Resident பணிகளுக்கான ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணிக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
ஆனால், இந்த பணிக்கு ஒரே ஒரு காலி பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், MD,DNB போன்றவற்றில் தேர்ச்சி பெற்ற நபர்கள் இந்த பணிக்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். அதோடு, இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 39,100 ரூபாய் ஊதியமாக வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
அதேபோல, இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களின் வயது 37க்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலமாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
மேலே சொல்லப்பட்ட அனைத்து தகுதிகளும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://pgimer.edu.in/PGIMER_PORTAL/AbstractFilePath?FileType=E&FileName=ped11Sep2023170133.pdf&PathKey=VACANCY_PATH என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சென்று, வரும் 19.9. 2023 அன்று மாலைக்குள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களோடு அதிகாரப்பூர்வமான முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.