நாள்தோறும், நம்முடைய செய்தி நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றும் பல்வேறு வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
அதன்படி, இன்று டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்திலிருந்து வெளியாகி இருக்கின்ற வேலைவாய்ப்பு குறித்த செய்தியை நாம் தெரிந்து கொள்ளலாம். அந்த நிறுவனத்தில், social media engagement பணிக்கு, பல்வேறு இடங்கள் நிரப்பப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், post graduate degree பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த பணிக்கு இரண்டு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களை தெரிந்து கொள்வதற்கு, இதன் அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று, பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் ஐந்து வருடங்கள் இந்த பணி தொடர்பான துறையில் பணியாற்றி, முன் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, தகுதி மற்றும் திறன் அடிப்படையில், ஊதியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்த நபர்கள், நேர்காணல் மற்றும் தகுதி தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இந்த பணிக்கு தகுதி வாய்ந்த மற்றும் ஆர்வமாக இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://dic.gov.in/images/career/Social-Media-Engagement-JD.pdf என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, வரும் 26.9.2023 அன்று மாலைக்குள் இதன் அதிகாரப்பூர்வமான முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.