fbpx

டெலிகிராமிலும் வரவுள்ள அசத்தல் இன்ஸ்டா அம்சம்!… என்ன தெரியுமா?… முழுவிவரம் இதோ!

இன்ஸ்டாகிராமில் உள்ளது போல ஸ்டோரிகளை பதிவிடும் அம்சத்தை டெலிகிராம் விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்திகளை பரிமாறிக்கொள்ளும் செயலிகளான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களை ஈர்க்க புதுப்புது அம்சங்களை வெளியிட்டு வருகிறது. இவற்றிக்கு போட்டியாக டெலிகிராமும் அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த செயலிகளில் உள்ள அம்சங்களில் சில டெலிகிராமில் ஏற்கனவே உள்ளன. தற்பொழுது, டெலிகிராம் ஆனது பயனர்களின் நீண்டகால கோரிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக, ஒரு அட்டகாசமான அம்சத்தை வெளியிட உள்ளது. அது என்னவென்றால் இனிமேல் பயனர்கள் வாட்ஸ்அப் மட்டும் இன்ஸ்டாகிராமில் உள்ளது போல டெலிகிராமிலும் ஸ்டோரிகளை பதிவிட்டுக்கொள்ளலாம்.

இந்த அம்சமானது ஜூலை மாதம் பயனர்களுக்கு கிடைக்கும் என்று டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி பாவேல் துரோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், பலமுறை டெலிகிராமில் ஸ்டோரிகளை பதிவிடும் அம்சத்தை கொண்டுவருமாறு பயனர்கள் எங்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பெறும் கோரிக்கைகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஸ்டோரி தொடர்பானவை. முன்னதாக, ஸ்டோரிகளை பதிவிடும் அம்சம் ஏற்கனவே பல செயலிகளில் இருப்பதால் ஆரம்பத்தில் நாங்கள் இதை எங்களது செயலியில் இணைக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

Kokila

Next Post

நாளையுடன் சைலேந்திரபாபு ஓய்வு...! தமிழகத்தின் அடுத்த டிஜிபி இவர் தான்...?

Thu Jun 29 , 2023
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில் காவல்துறையின் அடுத்த தலைவர் பட்டியலில் இருக்கும் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு உள்ளது. சென்னை மாநகராட்சியின் காவல்துறை ஆணையராக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அந்த பதவிக்கு நியமனம் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. 1992 ஐபிஎஸ் அதிகாரிகளின் பிரிவை சேர்ந்த ரத்தோர், கடந்த மாதம் டிஜிபி-யாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு முதல் ஆவடி நகர போலீஸ் […]

You May Like